நான்: பிறப்பு என்பது யாது?
கடவுள்: பிறந்து பார் தெரியும்.
நான்: மரணம் என்பது யாது?
கடவுள்: மரணித்து பார்... மரணம் பற்றி புரியும்.
நான்: வாழ்வென்பது யாது?
கடவுள்: வாழ்ந்து பார். வாழ்வு விளங்கும்.
நான்: அனைத்தையும் அனுபவித்து தான் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீஏன்?
கடவுள் சிரித்து கொண்டே சொன்னார் - அந்த அனுபவமே நான் தானடா...
No comments:
Post a Comment